/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வழிகாட்டி ஆசிரியர் பணி: ரத்து செய்ய கோரிக்கை
/
வழிகாட்டி ஆசிரியர் பணி: ரத்து செய்ய கோரிக்கை
ADDED : டிச 07, 2024 06:56 AM
நாமக்கல்: நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, பள்ளிக்கல்வித்துறை
அமைச்சருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகரசு தொடக்க கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்-ளிகளில், 1 முதல், 3ம் வகுப்பு வரை, 'எண்ணும் எழுத்தும்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் மதிப்பீடு செய்யவும்,
களப்பணியாளர்களாக செயல்பட உள்ள பி.எட்., கல்லுாரி மாணவர்களுக்கு உடனிருந்து வழிகாட்டுதல் வழங்கவும், அரசு
பள்ளிகளில் பணிபுரியும் முது-கலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதுகலை ஆசிரியர்-களை பொறுத்தவரை பிளஸ்
1, பிளஸ் 2 பொது தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்யக்கூடிய பணியை செய்து வருகின்-றனர். அதுமட்டுமின்றி,
பள்ளி வேலை நாட்களில், 'நீட்', ஜே.இ.இ., மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல்களுக்கான பயிற்சி வகுப்புகளை முதுகலை
ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர்.இவ்வாறு மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் பணிகள் தவிர்த்து பல்வேறு பணிகளை முதுகலை ஆசிரியர்கள் செய்து
வரக்கூடிய நிலையில், கூடுதலாக தொடக்க கல்வித்துறையில் செயல்படுத்தப்-பட்டுள்ள, 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை
மதிப்பீடு செய்-யவும், களப்பணியாளர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கவும் முது-கலை ஆசிரியர்களை நியமித்திருப்பது பெரும்
அதிர்ச்சியை ஏற்ப-டுத்தி உள்ளது.எனவே, அரசு பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர்களின் நலன் கருதி முதுகலை
ஆசிரியர்களுக்கு, 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டி ஆசிரியர் பணியை உடனடியாக ரத்து
செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.