/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உரக்கடைகளில் அதிகாரிகள் சோதனை விதி மீறினால் 'உரிமம் ரத்து' எச்சரிக்கை
/
உரக்கடைகளில் அதிகாரிகள் சோதனை விதி மீறினால் 'உரிமம் ரத்து' எச்சரிக்கை
உரக்கடைகளில் அதிகாரிகள் சோதனை விதி மீறினால் 'உரிமம் ரத்து' எச்சரிக்கை
உரக்கடைகளில் அதிகாரிகள் சோதனை விதி மீறினால் 'உரிமம் ரத்து' எச்சரிக்கை
ADDED : ஜூலை 03, 2024 07:46 AM
நாமக்கல், : நாமக்கல் மாவட்டத்தில், வேளாண் பயிர்கள் சாகுபடி தீவிரம-டைந்துள்ள நிலையில், பயிர்களுக்கு தேவையான உரங்கள் சரிவர விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறதா என, வேளாண் இயக்குனர் அறிவுரைப்படி, சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள தனியார், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் உரங்கள், சரி-யாக இருப்பு வைக்கப்பட்டு முறையாக உரக்கட்டுப்பாட்டு விதிகள் படி வினியோகம் செய்யப்படுகிறதா என, ஆய்வு செய்-யப்பட்டது.
'உர விற்பனை நிலையங்களில் விதி மீறல் ஊர்ஜிதமானால், உர உரிமம் ரத்து செய்யப்படும்' என அதிகாரிகள் எச்சரித்தனர்.
'உர நிறுவனங்களில், உரங்களின் இருப்பு, அதன் விலை குறித்த விலைப்பட்டியல் இருக்க வேண்டும். உரிமம் இன்றி உரம் விற்-பனை செய்தால், உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 'உர உரிமத்தில் முதன்மை சான்றுகள் இணைக்கப்பட்ட உரங்க-ளையே நிறுவனங்கள் விற்பனை செய்ய வேண்டும். மாவட்டத்-திற்கு, தற்போது தேவையான அளவு உரங்கள் மொத்தம், 9,541 மெட்ரிக் டன், தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 'இதுபோன்ற ஆய்வுகள், அவ்வப்போது திடீரென மேற்கொள்ளப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.