/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மேலப்பட்டி பஞ்., தொடக்கப்பள்ளியில் மாணவர் சட்டசபை தேர்தல்: முதல்வர், அமைச்சர்கள் தேர்வு

ADDED : ஆக 06, 2024 02:32 AM
மோகனுார், மோகனுார் ஒன்றியம், என்.புதுப்பட்டி பஞ்., மேலப்பட்டி பஞ்., தொடக்கப்பள்ளி உள்ளது. ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 101 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு, ஆண்டு தோறும், மாணவர் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. அதில், முதல்வர், கல்வி, விளையாட்டு, சுகாதாரம், உணவு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவர்.
அதன்படி, இந்தாண்டுக்கான சட்டசபை தேர்தல் பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் அண்ணாதுரை தேர்தல் ஆணையராக செயல்பட்டு நடத்தினார். தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. 101 மாணவ, மாணவியர், வரிசையாக நின்று தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர். தேர்தல் முடிவில் ஓட்டு எண்ணப்பட்டது. மாணவர் சட்டசபை அமைச்சரவையில், பவிக்ஷன் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும், முதல்வராக திவர்ஷினி, கல்வி அமைச்சராக ஓவியா, விளையாட்டுத்துறை அமைச்சராக ரித்திஹாஷன், சுகாதாரத்துறை அமைச்சராக கோஹிமா, உணவுத்துறை அமைச்சராக ராகுல், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக முகிஷா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவி ஏற்றுக் கொண்டனர்.
எம்.எல்.ஏ.,க்களாக, 5ம் வகுப்பு மாணவி ரியாஷினி, 4ம் வகுப்பு மாணவி சாந்தினி, மூன்றாம் வகுப்பு மாணவி வினிஷா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாணவர் சட்டசபை தேர்தலில், மூன்று ஓட்டுகள் நோட்டாவுக்கு விழுந்தது குறிப்பிடத்தக்கது.