/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அடிப்படை வசதி கேட்டு மின்னக்கல் மக்கள் மனு
/
அடிப்படை வசதி கேட்டு மின்னக்கல் மக்கள் மனு
ADDED : ஆக 13, 2024 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்தூர்: அடிப்படை வசதி செய்து தரக்கோரி, மின்னக்கல் பஞ்.,க்குட்-பட்ட வாய்க்கால் பட்டறை பகுதி மக்கள், கலெக்டர் அலுவல-கத்தில் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
வெண்ணந்துார் யூனியனுக்குட்பட்ட மின்னக்கல் பஞ்., வாய்க்கால் பட்டறை பகுதியில், கடந்த, 30 ஆண்டுக்கு மேலாக வசித்து வருகிறோம். ஆனால், சாலை வசதி, கழிவுநீர் செல்ல வாய்க்கால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகிறோம். எனவே, வாய்க்கால் பட்டறை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை வசதி, கழிவு நீர் செல்ல வாய்க்கால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துகொ-டுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.