/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிராமப்புற அரசுப்பள்ளி ஆசிரியருக்கு 'அபாகஸ்' பயிற்சி கருவி வழங்கல்
/
கிராமப்புற அரசுப்பள்ளி ஆசிரியருக்கு 'அபாகஸ்' பயிற்சி கருவி வழங்கல்
கிராமப்புற அரசுப்பள்ளி ஆசிரியருக்கு 'அபாகஸ்' பயிற்சி கருவி வழங்கல்
கிராமப்புற அரசுப்பள்ளி ஆசிரியருக்கு 'அபாகஸ்' பயிற்சி கருவி வழங்கல்
ADDED : ஆக 25, 2024 01:22 AM
கிராமப்புற அரசுப்பள்ளி ஆசிரியருக்கு
'அபாகஸ்' பயிற்சி கருவி வழங்கல்
நாமக்கல், ஆக. 25-
அமெரிக்கா குளோபல் அகாடமி ஆப் எக்சலன்ஸ், ரோட்டரி மாவட்ட கல்விக்குழு மற்றும் பவுல்டரி டவுன் ரோட்டரி சங்கம் சார்பில், முப்பெரும் விழா, நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடந்தது. நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 20 கிராமப்புற பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு, அமெரிக்கா குளோபல் அகாடமி ஆப் எக்சலன்ஸ் நிறுவனர் பிரஷிதா, கடந்த, மூன்று மாதங்களாக, இரண்டு மணி நேரம் இணையவழியில் பயிற்சியளித்தார். தொடர்ந்து, ஆசிரியர்களுக்கு இணையவழியில் தேர்வும் நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு, நேற்று நடந்த விழாவில் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், அபி எக் டிரேடர்ஸ் உரிமையாளர் பன்னீர்செல்வம், தாட்சாயினி ஆகியோர், 25,000 ரூபாய் மதிப்புள்ள அபாகஸ் பயிற்சி கருவிகளை வழங்கினர்.
ரோட்டரி மாவட்ட மகிழ்ச்சி பள்ளிகள் தலைவர் கருணாகர பன்னீர்செல்வம், பவுல்டரி ரோட்டரி டவுன் தலைவர் பிரபாகரன், அன்பு இல்லம் நிர்வாகி ஜெயராஜ் பரத், நிர்வாகிகள், விரிவுரையாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் பானுமதி, விரிவுரையாளர் தேவராசு ஆகியோர் செய்திருந்தனர்.

