/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்
/
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்
ADDED : ஆக 24, 2024 01:15 AM
நாமக்கல், ஆக. 24-
'வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில், சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தம், வரும், 2025ல் நடக்கிறது. அதற்கு முந்தைய திருத்த பணியின் முதல் நடவடிக்கையாக, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஓட்டுச்சாவடி அமைந்துள்ள பகுதியில் வசித்துவரும் அனைத்து வாக்காளர்களின் விபரங்களை வீடு, வீடாக சென்று சரிபார்ப்பு பணிகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பணி, வரும் அக்., 10 வரை தொடரும். கள ஆய்வின் போது ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களில் எத்தனை பேர் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர். 17 வயது நிரம்பியுள்ள இளம் வாக்காளர்கள் மற்றும் ஒவ்வொரு குடும்பத்திலும் விடுபட்டுள்ள வாக்காளர்களை கண்டறிந்து சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சரிபார்ப்பு பணியை, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் அனைவரும் தேர்தல் கமிஷனால் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள மொபைல் போன் அப்ளிகேஷன் மூலம் மேற்கொண்டுள்ளனர். ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களின் இல்லம் தேடி வரும்போது, வாக்காளர்கள் தங்களது பெயர், வயது, புகைப்படம், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள தெரிவிக்கலாம்.
மேலும், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கவும், இறந்துபோன அல்லது நிரந்தரமாக புலம் பெயர்ந்த நபர்களை இனம் கண்டு நீக்கம் செய்திடலாம். நாமக்கல் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் துாய்மையாக்கவும், விரைவாக இப்பணியை முடித்திடும் வகையில், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.