/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
50 ஆடு, 120 சேவல் பலியிட்டு சண்டி கருப்புசாமிக்கு சிறப்பு பூஜை
/
50 ஆடு, 120 சேவல் பலியிட்டு சண்டி கருப்புசாமிக்கு சிறப்பு பூஜை
50 ஆடு, 120 சேவல் பலியிட்டு சண்டி கருப்புசாமிக்கு சிறப்பு பூஜை
50 ஆடு, 120 சேவல் பலியிட்டு சண்டி கருப்புசாமிக்கு சிறப்பு பூஜை
ADDED : ஆக 13, 2024 06:24 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த அரியாக்கவுன்டன்பட்டியில், சண்டி கருப்புசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆடி அமாவாசையில் கருப்பசாமிக்கு திருவிழா மிக சிறப்பாக நடப்பது வழக்கம். அந்த திருவிழாவில் தொழில், வியாபாரம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வேண்டி வேண்டுதல்கள் வைக்கும் பக்தர்கள், நிறைவேறிய பின், ஆடி அமாவாசை திருவிழா முடிந்து ஒரு வாரத்தில், ஆடு, சேவல்களை பலியிட்டு படையல் பூஜை நடத்துவர்.
அதன்படி, நேற்று நடந்த படையல் பூஜையில், 50 ஆடு, 120 சேவல்களை பலியிட்டு, 200க்கும் மேற்பட்ட படையல்கள் அமைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதில், சேலம், நாமக்கல், ஆத்துார், சென்னை, திருச்சி, மதுரை, பெரம்பலுார், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 2,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.