/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் குறைப்பு ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில் அதிருப்தி
/
துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் குறைப்பு ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில் அதிருப்தி
துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் குறைப்பு ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில் அதிருப்தி
துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் குறைப்பு ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில் அதிருப்தி
ADDED : மார் 06, 2025 03:42 AM
ப.வேலுார்: ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில் தற்காலிக துாய்மை பணியா-ளர்களுக்கு சம்பளம் குறைப்பால் அதிருப்தியடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் குப்பை சேகரிக்க, 35 தற்கா-லிக துாய்மை பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாதந்-தோறும் ஊதியமாக, 16,500 ரூபாய் வங்கியில் செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று அவர்களுக்கு ஊதியமாக, 13,200 ரூபாய் மட்டுமே, வங்கியில் செலுத்தப்பட்டது. இதனால், தற்கா-லிக துாய்மை பணியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதுகுறித்து, தற்காலிக துாய்மை பணியாளர்கள் கூறியதாவது: சில மாதங்களுக்கு முன், எங்களின் கோரிக்கையை ஏற்று டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் ஊதியத்தை, 3,300 ரூபாய் உயர்த்தியது. தற்போது, உயர்த்தப்பட்ட ஊதியத்தை ரத்து செய்தது அதிர்ச்-சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பளம் குறைத்ததற்கான காரணம் தெரிய-வில்லை.
சில மாதங்களுக்கு முன், பொத்தனுார் டவுன் பஞ்சாயத்தில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு சம்பளத்தை குறைத்-தனர். அவர்கள், டவுன் பஞ்சாயத்து அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடத்தி, குறைத்த சம்பளத்தை திரும்ப பெற்றனர். இதேபோல், தற்போது குறைக்கப்பட்ட சம்பளத்தை, மீண்டும் எங்களுக்கு வழங்க வேண்டும். இல்லையெனில் அனைத்து துாய்மை பணியாளர்களும், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து அலு-வலகம் முன் போராட்டம் நடத்த நேரிடும். மேலும், மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளத்தை திரும்ப வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, துாய்மை மேற்பார்வையாளர்களிடம் கேட்ட-போது, 'தற்காலிக துாய்மை பணியாளர்களுக்கு மட்டும், சில மாதங்களுக்கு முன் உயர்த்தப்பட்ட சம்பளத்தை ரத்து செய்து-விட்டு, பழைய சம்பளத்தையே வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது, ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து அதிகாரிகள் எடுத்த முடிவு' என்றனர்.