/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சமயசங்கிலி ஆற்றில் பரிசலில் மணல் கடத்தல்
/
சமயசங்கிலி ஆற்றில் பரிசலில் மணல் கடத்தல்
ADDED : பிப் 25, 2025 04:46 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, சமயசங்கிலி பகுதியில் உள்ள காவிரி ஆற்றில், கடந்த ஏழு மாதமாக, இரண்டு கரைகளையும் தொட்ட-படி தண்ணீர் சென்றது. இதனால், தண்ணீரில் மணல்கள் அடித்து வரப்பட்டன. கடந்த, 20 நாட்களாக ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால், தண்ணீரில் மூழ்கி இருந்த மணல் திட்டுகள் வெளியே தெரிகின்றன. நேற்று மாலை, 5:00 மணிக்கு, சிலர் பரி-சலில் மணல் திட்டுக்கு சென்று, மணலை பிளாஸ்டிக் சாக்கு பையில் மூட்டைகளாக கட்டி கரைக்கு கொண்டு வந்து பதுக்கி வைத்தனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இரவு, 7:00 மணிக்கு, வருவாய்த்துறை அதி-காரிகள் சமயசங்கிலி ஆற்றுப்பகுதிக்கு சென்றனர். அதிகாரிகளை பார்த்ததும், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடினர். பின் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை பிரித்து ஆற்றிலேயே அதிகாரிகள் வீசினர். இதுகுறித்து அதிகாரிகள் விசா-ரித்து வருகின்றனர்.