/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குட்கா விற்ற கடைக்கு 'சீல்' ரூ.25,000 அபராதம் விதிப்பு
/
குட்கா விற்ற கடைக்கு 'சீல்' ரூ.25,000 அபராதம் விதிப்பு
குட்கா விற்ற கடைக்கு 'சீல்' ரூ.25,000 அபராதம் விதிப்பு
குட்கா விற்ற கடைக்கு 'சீல்' ரூ.25,000 அபராதம் விதிப்பு
ADDED : ஆக 21, 2024 01:37 AM
குட்கா விற்ற கடைக்கு 'சீல்'
ரூ.25,000 அபராதம் விதிப்பு
ப.வேலுார், ஆக. 21-
ப.வேலுாரில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம், ப.வேலுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட பகுதிகளில் உள்ள டீக்கடை, மளிகை கடைகளில், போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ப.வேலுார் ரிஜிஸ்டர் அலுவலகம் எதிரே உள்ள பெட்டிக்கடையில், 400 கிராம் குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும், கடை உரிமையாளர் ராமன், 65, என்பவருக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி, நேற்று கடைக்கு, 'சீல்' வைத்தார். 21 நாட்களுக்கு கடையை திறக்க அனுமதி இல்லை. 'தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வோர் குறிப்பாக பள்ளி, கல்லுாரி அருகே விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, உணவு பாதுகாப்பு அலுவலர்
முத்துசாமி தெரிவித்தார்.