/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பேச்சு, கட்டுரை போட்டி அரசு பெண்கள் பள்ளி சாதனை
/
பேச்சு, கட்டுரை போட்டி அரசு பெண்கள் பள்ளி சாதனை
ADDED : ஆக 02, 2024 01:29 AM
குமாரபாளையம்,
குமாரபாளையம், அரசு பெண்கள் பள்ளி மாணவியர் மாவட்ட, வட்டார அளவிலான பேச்சு, கட்டுரை போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.
பள்ளிபாளையம் வட்டார அளவிலான பேச்சுப்போட்டி, வல்வில் ஓரி தினவிழாவையொட்டி நடந்தது. 50க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர். குமாரபாளையம், அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 வகுப்பில் பயிலும் மாணவி யுவஸ்ரீ முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்ந்தார். இவர் மாவட்ட அளவிலான பேச்சு போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதே தலைப்பில் நடந்த கட்டுரை போட்டியில், பிளஸ் 1 பயிலும் மாணவி ஹரிணி இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்தார்.
அம்பேத்கர் பிறந்த நாள் விழாவையொட்டி, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி நடந்தது. இதில், குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் பயிலும் மாணவி அகிலா, மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தார். சாதனை படைத்த மாணவிகளை, தலைமை ஆசிரியை காந்தரூபி, துணை தலைமை ஆசிரியை சாரதா, ஆசிரியர்கள் பாராட்டினர்.