/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செப்., 4, 5ல் மாவட்ட தடகள போட்டி பதிவு செய்ய மாணவர்களுக்கு அழைப்பு
/
செப்., 4, 5ல் மாவட்ட தடகள போட்டி பதிவு செய்ய மாணவர்களுக்கு அழைப்பு
செப்., 4, 5ல் மாவட்ட தடகள போட்டி பதிவு செய்ய மாணவர்களுக்கு அழைப்பு
செப்., 4, 5ல் மாவட்ட தடகள போட்டி பதிவு செய்ய மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : ஆக 25, 2024 01:21 AM
செப்., 4, 5ல் மாவட்ட தடகள போட்டி
பதிவு செய்ய மாணவர்களுக்கு அழைப்பு
நாமக்கல், ஆக. 25-
'வரும், செப்., 4, 5ல் மாவட்ட தடகள போட்டி நடக்கிறது. அதில், பங்கேற்க விருப்பம் உள்ள மாணவ, மாணவியர் முன்பதிவு செய்து கொள்ளலாம்' என, நாமக்கல் மாவட்ட தடகள சங்க தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான சின்ராஜ், செயலாளர் வெங்கடாஜலபதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்ட தடகள சங்கம் சார்பில், வரும் செப்., 4, 5ல், மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., கல்லுாரியில் நடக்கிறது. போட்டி, காலை, 6:00 முதல், மாலை, 6:00 மணி வரை நடக்கும். இப்போட்டியில் வெற்றி பெற்று, தகுதி பெறுபவர்கள், மாநில அளவிலான இளையோர் தடகள போட்டிக்கு, நாமக்கல் மாவட்ட தடகள அணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
இப்போட்டிகளில், அரசு, தனியார் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். இதற்கான முன்பதிவு விண்ணப்பங்கள் பள்ளி, கல்லுாரி முதல்வர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் ஒப்புதலுடன் அனுப்பி வைக்க வேண்டும். போட்டிகள், வயது வரம்பின் அடிப்படையில், 4 பிரிவுகளாக நடத்தப்படும். 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில், 2004 நவ., 12 முதல், 2006 நவ., 11க்குள் பிறந்தவர்கள், 18 வயதிற்குட்பட்டோர் பிரிவில், 2006 நவ., 12 முதல், 2008 நவ., 11க்குள் பிறந்தவர்கள் பங்கேற்கலாம்.
அதேபோல், 6 வயதுக்குட்பட்டோர் பிரிவில், 2008 நவ., 12 முதல், 2010 நவ., 11 வரை பிறந்தவர்களும், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், 2010 நவ., 12 முதல், 2012 நவ., 11 வரை பிறந்தவர்கள் கலந்து கொள்ளலாம். ஒரு போட்டியாளர், இரண்டு போட்டியில் மட்டுமே கலந்துகொள்ளலாம். அனைத்து பள்ளி, கல்லுாரி சார்பில் போட்டியிடும் மாணவ, மாணவியர், தங்களின் கல்வி நிறுவன கொடியுடன், போட்டி துவங்கும், 4 காலை, 9:00 மணிக்கு நடக்கும் துவக்க விழா அணிவகுப்பில் கலந்துகொள்ள வேண்டும். அணிவகுப்பில் கலந்துகொள்ளாதவர்கள் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது.
மேலும் விபரங்களுக்கு, 94448-79213, 86101-23646, 99421-25252 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.