/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காற்றின் வேகம் அதிகரிப்பால் தடுப்பணை நீர்தேக்க பகுதியில் அலை
/
காற்றின் வேகம் அதிகரிப்பால் தடுப்பணை நீர்தேக்க பகுதியில் அலை
காற்றின் வேகம் அதிகரிப்பால் தடுப்பணை நீர்தேக்க பகுதியில் அலை
காற்றின் வேகம் அதிகரிப்பால் தடுப்பணை நீர்தேக்க பகுதியில் அலை
ADDED : செப் 06, 2024 01:42 AM
காற்றின் வேகம் அதிகரிப்பால்
தடுப்பணை நீர்தேக்க பகுதியில் அலை
பள்ளிப்பாளையம், செப். 6-
ஓடப்பள்ளி தடுப்பணை நீர்தேக்கம் பகுதியில், முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, கடல் போல காணப்படுகிறது. சில நாட்களாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், நீர்தேக்கத்தில் அலை ஏற்படுகிறது.
பள்ளிப்பாளையம் அடுத்த ஓடப்பள்ளி பகுதியில், காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. தற்போது ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், இந்த தடுப்பணை நீர் தேக்கம் பகுதியில் ஒன்பது மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
தடுப்பணை நீர்தேக்கம் பகுதியில், முழு கொள்ளளவு தண்ணீர் தேங்கியிருப்பதால், கடல் போல காணப்படுகிறது. தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் அமைதியாக சமநிலையில் எப்போதும் காணப்படும். இந்நிலையில், கடந்த சில நாட்களாக காற்றின் வேகம், நீர்தேக்கம் பகுதியில் அதிகரித்து காணப்படுவதால், சமநிலையில் இருந்த தண்ணீர் அலை, அலையாக ஒன்றின் ஒன்றாக கரையை நோக்கி வருகிறது. இதனை பலரும் பார்த்து ரசித்து செல்கின்றனர்.