/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆதரவின்றி பிசுபிசுத்து போன கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
/
ஆதரவின்றி பிசுபிசுத்து போன கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
ஆதரவின்றி பிசுபிசுத்து போன கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
ஆதரவின்றி பிசுபிசுத்து போன கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 16, 2024 01:10 AM
ராசிபுரம், ராசிபுரம் பஸ் ஸ்டாண்டை மாற்றக்
கூடாது என, நேற்று நடந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் ஆதரவின்றி பிசுபிசுத்து போனது.
ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டை அணைப்பாளையம் பகுதிக்கு மாற்றக்கூடாது என்றும், பஸ் ஸ்டாண்டை மாற்ற நகராட்சி நிர்வாகம் கொண்டு வந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி, ராசிபுரம் புதிய பஸ் நிலையம் மீட்பு கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மனு கொடுக்கும் போராட்டம், மனித சங்கிலி, உண்ணாவிரத போராட்டம் என தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், சுதந்திர தினமான நேற்று ராசிபுரம் நகர் முழுவதும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்திற்கு பா.ஜ., ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
அதேபோல், நேற்றைய போராட்டத்தில் முக்கிய பிரமுகர்கள் வீடுகள் தவிர, வேறு எங்கும் கருப்புக்கொடி ஏற்றவில்லை. இதனால் போராட்டம் பொதுமக்கள் ஆதரவின்றி பிசுபிசுத்து போனது.

