/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓட்டல் குளியலறையில் கேட்டரிங் மாணவி பலி சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் மறியல்
/
ஓட்டல் குளியலறையில் கேட்டரிங் மாணவி பலி சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் மறியல்
ஓட்டல் குளியலறையில் கேட்டரிங் மாணவி பலி சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் மறியல்
ஓட்டல் குளியலறையில் கேட்டரிங் மாணவி பலி சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் மறியல்
ADDED : ஆக 15, 2024 01:53 AM
நாமக்கல்,
கொல்லிமலை ஓட்டலில் பயிற்சியில் இருந்த கேட்டரிங் கல்லுாரி மாணவி, குளியலறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி, பெற்றோர், உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் அடுத்த களங்காணியை சேர்ந்த சரவணன், ரேவதி தம்பதியரின் மகள் கோபிகா, 17; இவர், நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் கேட்டரிங் கல்லுாரியில், இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்த கல்லுாரியில், ஓட்டல் மேலாண் மற்றும் கேட்டரிங் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியர்,
பயிற்சிக்காக பல்வேறு
ஓட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, கோபிகா மற்றும் சக மாணவியர், பயிற்சிக்காக கொல்லிமலையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு பயிற்சி பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, குளியலறையில் மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டதாக, பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மதியம், 1:00 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். நல்லிபாளையம் போலீசார் சமரசம் செய்ததையடுத்து, மறியலை கைவிட்டனர். ஆனால், உடலை வாங்க மறுத்தனர். மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, மாலை, 4:45 மணிக்கு, மாணவி கோபிகாவின் உடலை பெற்றுச்சென்றனர். இதுகுறித்து, வாழவந்திநாடு போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம், நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.