ADDED : ஆக 22, 2024 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புகையிலை விற்றவர் கைது
குமாரபாளையம், ஆக. 22-
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம், அணிமூர் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 31. இவர், நேற்று வெப்படை அருகே உள்ள சின்னார்பாளையம் பகுதியில் உள்ள பேக்கரி அருகே, நேற்று கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார். அந்த வழியாக ரோந்து சென்ற வெப்படை போலீசார், அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், 5 கிலோ புகையிலை பொருட்களை, விற்பனை செய்வதற்காக பையில் வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து, 5 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.