தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ஆஞ்சநேயருக்குதங்கக்கவச அலங்காரம்

ஆஞ்சநேயருக்குதங்கக்கவச அலங்காரம்

ஆஞ்சநேயருக்குதங்கக்கவச அலங்காரம்


ADDED : மார் 23, 2025 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2025 01:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆஞ்சநேயருக்குதங்கக்கவச அலங்காரம்

நாமக்கல்:பங்குனி மாத, மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்கக்கவசம் அலங்காரம் செய்யப்பட்டது.நாமக்கல் நகரின் மத்தியில், நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித்தாயார் கோவில் எதிரில், ஒரே கல்லினால், 18 அடி உயரத்தில் உருவான

ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, சுவாமி வணங்கிய நிலையில், சாந்த சொரூபியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

நேற்று பங்குனி மாத சனிக்கிழமை, மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு காலை, 9:00 மணிக்கு சுவாமிக்கு, 1,008 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. 10:00 மணிக்கு நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சீயக்காய், 1,008 லிட்டர் பால், தயிர், திருமஞ்சள் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதையடுத்து, தங்கக்கவசம் சார்த்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us