நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேகத்தடை தேவை
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம், பெரியமணலி பண்ணாரியம்மன் கோவில் அருகே, வேலகவுண்டம்பட்டி - வையப்ப மலை செல்லும் சாலையில், நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இந்த சாலையில் வளைவு பகுதிகள் அதிகம் உள்ளன. இங்கு விபத்தை தடுக்க ஆங்காங்கே, 'ரம்பிள் ஸ்ட்ரிப்ஸ்' எனப்படும் குறுக்கு பட்டை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த பயனும் இல்லை.
இதில், வாகனங்கள் வேகமாகவே செல்கின்றன. கடந்த, ஆறு மாத காலத்தில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலர் எலும்பு முறிவுக்கு ஆளாகி உள்ளனர். இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதை தவிர்க்க பண்ணாரியம்மன் கோவில் அருகே, மூன்று ரோடு பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.