நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம், முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., பிறந்த நாளையொட்டி, ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட மங்களபுரத்தில், கடந்த, ஐந்து நாட்களாக கிரிக்கெட் போட்டி நடந்தது.
ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி தலைமை வகித்தார். இதில், 50க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடின. இறுதிப்போட்டி, நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் சரோஜா, போட்டியை துவக்கி வைத்தார்.
இதில், முதல் பரிசு வென்ற மங்களபுரம் சச்சின் அணிக்கு, 25,071 ரூபாய்; 2ம் பரிசு வென்ற எம்.ஆர்.எப்., அணிக்கு, 19,071 ரூபாய், கோப்பை,
சான்றிதழை, முன்னாள் அமைச்சர் சரோஜா வழங்கினார். ஈரோடு மண்டல இணை செயலாளர் பொன் அரவிந்தன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து
கொண்டனர்.
கொல்லிமலையில் கடும் பனி மூட்டம்

