நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு, ஆவணி பிரதோஷத்தையொட்டி, திருச்செங்கோடு, கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. கைலாசநாதர் மற்றும் நந்திபகவானுக்கு பால், தயிர், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து,
சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. பின், பிரதோஷ நாயகர்கள் பிரகார வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். * இதேபோல், சேந்தமங்கலம் சோமேஸ்வரர், ஆர்.பி.,புதுார் ஆசிரமத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.