நாமக்கல், நாமக்கல் அடுத்த மாரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் கற்பக விநாயகர், மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் ஆலய மகா கும்பாபிஷேகம், வரும், 29ல் நடக்கிறது. இதற்காக, நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு கணபதி ஹோமம், மகா லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தது.
தொடர்ந்து, மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இன்று மாலை, 6:00 மணிக்கு முதற்கால யாக பூஜை, வாஸ்து சாந்தி, மருந்துசங்கிரணம், பூமி பூஜை ஆகியவை நடக்கிறது. நாளை காலை, 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, 11:00 மணிக்கு மேல் கோபுர கலசம் வைத்தல் அஷ்டபந்தனம் மருந்து சாத்துதல் நடக்கிறது. 4:00 மணிக்கு மூன்றாம் கால யாக வேள்வி
நடக்கிறது.
நாளை மறுநாள் அதிகாலை, 4:30 மணிக்கு, நான்காம் கால யாக வேள்வி, மகா தீபாரதனை, கலச புறப்பாடும், 6:00 மணிக்கு கோபுரங்களுக்கும், மூலஸ்தானத்திற்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை, விழாக் குழுவினர் செய்துள்ளனர்.