ADDED : அக் 11, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி, எருமப்பட்டி வட்டார வள மையம் முன், ஆசிரியர்கள் சங்கம் சார்பில், 'எண்ணும் எழுத்தும்' கல்வித்திட்ட பயிற்சி உள்ளிட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான அனைத்து பணியிட பயிற்சிகளும், காலை, 10:00 முதல் மாலை, 4:15 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும்; பணியிடப்பயிற்சி ஆசிரியர்களுக்கான மதிய உணவு இடைவேளை நேரத்தை நீடிக்க வேண்டும்;
வட்டார வள மையத்தில் ஆசிரியர்கள் தேவைக்கு ஏற்ப போதுமான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட, மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. டிட்டோஜாக் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.