/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஒரு மாதத்தில் 10,000 பயனாளிக்கு பட்டா ஆணை வழங்கப்படும்: எம்.பி.,
/
ஒரு மாதத்தில் 10,000 பயனாளிக்கு பட்டா ஆணை வழங்கப்படும்: எம்.பி.,
ஒரு மாதத்தில் 10,000 பயனாளிக்கு பட்டா ஆணை வழங்கப்படும்: எம்.பி.,
ஒரு மாதத்தில் 10,000 பயனாளிக்கு பட்டா ஆணை வழங்கப்படும்: எம்.பி.,
ADDED : செப் 01, 2024 03:48 AM
நாமக்கல்: தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, இலவச வீட்டுமனை பட்டா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நாமக்கல்லில் நடந்தது.
கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ராமலிங்கம், நாமக்கல் மாநகராட்சி தலைவர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.பி.,யும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலை-வருமான ராஜேஸ்குமார், 668 பயாளிகளுக்கு, 7.25 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:நாமக்கல் மாவட்டத்தில், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், 18,651 மாணவியர், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ், 12,796 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். நாமக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில், அரசின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 6,000 பேருக்கு, வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் சீரிய முயற்-சியால், 2021 முதல், இதுவரை, 17,134 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. தற்போது, நாமக்கல் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, 488 பயனாளிகளுக்கு, 6.82 கோடி ரூபாய் மதிப்பில், பட்டாக்கள் வழங்கப்படுகிறது. மேலும், அடுத்த ஒரு-மாத காலத்திற்குள், 10,000 பேருக்கு பட்டா ஆணைகள் வழங்-கப்பட உள்ளது.
இவ்வாறு பேசினார்.