/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
1.04 லட்சம் குழந்தைகளுக்கு'வைட்டமின் ஏ' திரவம் வழங்க ஏற்பாடு
/
1.04 லட்சம் குழந்தைகளுக்கு'வைட்டமின் ஏ' திரவம் வழங்க ஏற்பாடு
1.04 லட்சம் குழந்தைகளுக்கு'வைட்டமின் ஏ' திரவம் வழங்க ஏற்பாடு
1.04 லட்சம் குழந்தைகளுக்கு'வைட்டமின் ஏ' திரவம் வழங்க ஏற்பாடு
ADDED : மார் 15, 2025 02:28 AM
1.04 லட்சம் குழந்தைகளுக்கு'வைட்டமின் ஏ' திரவம் வழங்க ஏற்பாடு
நாமக்கல்:'நாமக்கல் மாவட்டத்தில், சிறப்பு முகாம் மூலம், 1.04 லட்சம் குழந்தைகளுக்கு, 'வைட்டமின் ஏ' திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில், ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும், வரும், 17 முதல், 22 வரை, சிறப்பு முகாம்கள் மூலம், 'வைட்டமின் ஏ' திரவம் வழங்கப்பட உள்ளது. இதில், மொத்தம் ஒரு லட்சத்து, 4,113 குழந்தைகளுக்கு, 'வைட்டமின் ஏ' திரவம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆறு மாதம் முதல் 11 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு, 1 மி.லி., மற்றும் 12 மாதம் முதல், 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, 2 மி.லி., திரவம் கிராம, நகர சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர், எஸ்.எச்.ஏ., பணியாளர்கள், இரண்டாமாண்டு ஏ.என்.எம்., பயிற்சி மாணவிகள் மற்றும் சுகாதார ஆய்வாளர் பயிற்சி மாணவர்கள் மூலம், அங்கன்வாடி மையங்களில் வைத்து, 'வைட்டமின் ஏ' திரவம் வழங்கப்படும்.
மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், தங்கள் வீடுகளில் உள்ள, ஆறு மாதம் முதல், ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள அங்கன்வாடி மையங்களில் நடத்தப்படும் முகாம்களில், 'வைட்டமின் ஏ' திரவம் வழங்கி, பார்வை இழப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.