/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டத்தில் நகர்ப்புற கைத்தறி நெசவாளர் 29 பேருக்கு வீடு கட்ட ரூ.1.16 கோடி நிதி
/
மாவட்டத்தில் நகர்ப்புற கைத்தறி நெசவாளர் 29 பேருக்கு வீடு கட்ட ரூ.1.16 கோடி நிதி
மாவட்டத்தில் நகர்ப்புற கைத்தறி நெசவாளர் 29 பேருக்கு வீடு கட்ட ரூ.1.16 கோடி நிதி
மாவட்டத்தில் நகர்ப்புற கைத்தறி நெசவாளர் 29 பேருக்கு வீடு கட்ட ரூ.1.16 கோடி நிதி
ADDED : செப் 15, 2024 02:52 AM
வெண்ணந்துார்: நகர்ப்புற கைத்தறி நெசவாளர்கள், 29 பேருக்கு, தலா, 4 லட்சம் வீதம், 1.16 கோடி ரூபாய், தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழக முதல்வர், 'கைத்தறி நெசவாளர்களுக்கு வீடு கட்ட மானியமாக வழங்கப்படும் தொகையை, 4 லட்சம் ரூபாயாக உயர்த்தி, நகர்ப்புற நெசவாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்' என அறிவித்தார்.அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நெசவாளர்கள் கூட்-டுறவு சங்கத்தில் பதிவு செய்த, 29 நகர்ப்புற கைத்தறி நெசவாளர்-களுக்கு, தலா, 4 லட்சம் வீதம், 1.16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழ்நாடு நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரி-யத்தின் மூலம், வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகி-றது. குறிப்பாக, வெண்ணந்துார் டவுன் பஞ்.,க்குட்பட்ட பகுதி-களில், 7 கைத்தறி நெசவாளர்களுக்கு, தலா, 4 லட்சம் ரூபாய் வீதம் மானியத்தில் வீடு கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்-ளது.
இந்நிலையில், வெண்ணந்துார் டவுன் பஞ்., நகர்ப்புற கைத்தறி நெசவாளர்களுக்கு மானியத்துடன் கூடிய வீடுகள் கட்டும் பணியை, நாமக்கல் கலெக்டர் உமா, பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பயனாளி நாகராஜ், சந்திரா ஆகியோரது வீட்டை கலெக்டர் உமா பார்வையிட்டு, இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட மானிய தொகை விபரம், மேற்கொண்டு வரும் நெசவுத்தொழில், நெசவு செய்யும் ரகங்கள், அதன் மூலம் கிடைக்க பெறும் வருமானம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, 'தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, மானியை தொகையை விரைந்து வழங்கி, பணிகளை முடித்து, பயன்பாட்டுக்கு கொண்-டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கலெக்டர் உமா, அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கைத்தறி துறை உதவி இயக்குனர் பழனிகுமார், துறை அலுவ-லர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.