/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஏப்., 12ல் பங்குனி தேர்த்திருவிழாநரசிம்மர் கோவிலில் முகூர்த்தக்கால் நடல்

ADDED : மார் 20, 2025 01:39 AM
ஏப்., 12ல் பங்குனி தேர்த்திருவிழாநரசிம்மர் கோவிலில் முகூர்த்தக்கால் நடல்
நாமக்கல்:நாமக்கல் நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சநேயர் கோவில் பங்குனி தேர்த்திருவிழா, வரும் ஏப்., 12ல் நடக்கிறது. அதை முன்னிட்டு, நேற்று முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது.
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி தேர்த்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி நடப்பாண்டு திருவிழா, வரும் ஏப்., 4ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று முதல் சுவாமி பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். மேலும், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் நரசிம்மர் மற்றும் அரங்கநாத சுவாமி திருக்கல்யாணம் நடைபெறும்.
ஏப்., 12 காலை, 8:00 மணிக்கு, நரசிம்மர் கோவில் தேரோட்டம், அன்று மாலை, 4:00 மணிக்கு அரங்கநாதர், ஆஞ்சநேயர் தேரோட்டம் நடக்கிறது. பங்குனி தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தேர்களிலும், மண்டபத்திலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள், பந்தல் அமைப்பது போன்றவற்றுக்கான முகூர்த்தக்கால் நடும் விழா, நேற்று நடந்தது. விழாவில், அர்ச்சகர்கள், அறங்காவலர்கள் மல்லிகா, செல்வசீராளன், கோவில் ஊழியர்கள் பங்கேற்றனர்.