/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
260 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
/
260 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
ADDED : பிப் 07, 2025 01:06 AM
260 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம், பரமத்தி போலீஸ் எஸ்.ஐ., ரவி தலைமையிலான போலீசார், கீரம்பூர் டோல்கேட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். ஆனால் போலீசாரை கண்டதும் டிரைவர் தப்பி ஓட முயற்சி செய்தார்.
அவரை பிடித்து விசாரித்த போது கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கெலமங்கலம் பகுதியை சேர்ந்த முனிராமையா மகன் சந்திரசேகர், 27, என்பது தெரிய வந்தது. காரில் இருந்த சாக்கு மூட்டைகளில் 260 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. குட்கா, காரை பறிமுதல் செய்த பரமத்தி போலீசார், சந்திர
சேகரை கைது செய்தனர்.

