/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காப்பு காட்டில் சந்தன மரம் வெட்டிய 3 வாலிபர் கைது
/
காப்பு காட்டில் சந்தன மரம் வெட்டிய 3 வாலிபர் கைது
ADDED : ஆக 04, 2024 03:32 AM
நாமகிரிப்பேட்டை,: முள்ளுக்குறிச்சி காப்பு காட்டில் சந்தன மரம் வெட்டிய, மூன்று இளைஞர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.
நாமகிரிப்பேட்டை யூனியன், முள்ளுக்குறிச்சி காப்புக்காடு பகு-தியில் சந்தனமரங்களை வெட்டி கடத்துவதாக, வனத்துறையின-ருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத்துறையினர் சம்-பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது, மூன்று பேர் காப்புக்காடு பகுதியில் சந்தன மரங்-களை வெட்டி கடத்த முயன்றது தெரிந்தது. அவர்களை பிடித்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்து, 15 கிலோ சந்தன கட்-டைகளை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், முள்ளுக்குறிச்சியை சேர்ந்த மணிகண்டன், 34, கொல்லிமலையை சேர்ந்த சிவக்குமார், 30, பிரகாஷ், 34, என்-பதும், நேற்று காலை முதல் சந்தனமரங்களை வெட்டியது தெரிய-வந்தது. இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்த வனத்து-றையினர், சிறையில் அடைத்தனர்.