/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் 4 நுால்கள் வெளியீட்டு விழா
/
நாமக்கல்லில் 4 நுால்கள் வெளியீட்டு விழா
ADDED : மார் 28, 2025 01:19 AM
நாமக்கல்லில் 4 நுால்கள் வெளியீட்டு விழா
நாமக்கல்:நாமக்கல்லில், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், நான்கு நுால்கள் வெளியீட்டு விழா நடந்தது.
நாமக்கல் பூங்கா சாலை, சர்வம் அறக்கட்டளை அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு, அதன் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். தொடர்ந்து 'கவிபாரதி' சிறுவர் பாடல்கள் நுால், ஓய்வு பெற்ற நீதிபதி குகன் எழுதிய புதிய குறள்கள்--1 மாணவர்களுக்கு 100 எனும் நுால், மோகனுார் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் படைப்பான டிக் டிக் பென்சில் (சிறுவர் பாடல்கள்) எனும் நுால், ஆசிரியர் வீரராகவன் எழுதிய டமால் டமால் பட்டாசு நுால் வெளியிடப்பட்டது. அந்த புத்தகங்களை மாவட்ட செயலாளர் லதா, பொருளாளர் சரவணன், அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வீரராகவன், வாழவந்தி அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர் கனகராஜ், சர்வம் அறக்கட்டளை நிர்வாகி ரம்யா ஆகியோர் பெற்று கொண்டனர்.

