/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரேஷன் கடையை இடமாற்ற எதிர்ப்பு 4 கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
/
ரேஷன் கடையை இடமாற்ற எதிர்ப்பு 4 கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
ரேஷன் கடையை இடமாற்ற எதிர்ப்பு 4 கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
ரேஷன் கடையை இடமாற்ற எதிர்ப்பு 4 கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
ADDED : செப் 17, 2024 01:31 AM
ரேஷன் கடையை இடமாற்ற எதிர்ப்பு
4 கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
நாமக்கல், செப். 17-
கடந்த, 34 ஆண்டுகளாக இய ங்கி வரும் ரேஷன் கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, 4 கிராமத்தினர் நாமக்கல் கலெக்டர் உமாவிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், எலச்சிப்பாளையம் யூனியன், லத்துவாடியில், மானத்தி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்துக்கு உட்பட்ட ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை, ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கட்டடத்தில், கடந்த, 34 ஆண்டுகளாக வாடகைக்கு செயல்பட்டு வருகிறது. அங்கு, சிற்றுார், லத்துவாடி, கூப்பிட்டாம்பாளையம், புதுார், சாலையூர், செலம்பகவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ள மக்கள், பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில், இந்த ரேஷன் கடைக்கு, செலம்பகவுண்டம்பாளையம் பகுதியில் கட்டடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ரேஷன் கடை அமைந்தால், லத்துவாடியில் இருந்து, 1.5 கி.மீ., கூப்பிட்டாம்பாளையத்தில் இருந்து, 2 கி.மீ., புதுாரில் இருந்து, 3- கி.மீ., சாலையூரில் இருந்து, 4 கி.மீ., துாரத்தில் இருந்து மக்கள் செல்லும் நிலை உள்ளது. எனவே, அனைவருக்கும் பொதுவான இடத்தில் ரேஷன் கடை கட்ட, மக்களிடம் கருத்து கேட்டு
அனுமதியளிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.