/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
5 கிலோ குட்கா பறிமுதல் டீ கடை உரிமையாளர் கைது
/
5 கிலோ குட்கா பறிமுதல் டீ கடை உரிமையாளர் கைது
ADDED : ஜன 23, 2025 01:35 AM
5 கிலோ குட்கா பறிமுதல் டீ கடை உரிமையாளர் கைது
ப.வேலுார், : ப.வேலுார் அருகே, அண்ணா நகர், மீனாட்சிபாளையம் பகுதியில் உள்ள கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர், அண்ணா நகர் பகுதியில் உள்ள டீக்கடை, பெட்டிக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
இதில், அண்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் ஆய்வு மேற்கொண்டபோது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, 5 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், கொந்தளத்தை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் தனசேகரன், 39, என்பவரை கைது செய்தனர்.