/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வாகன சோதனையில் பறிமுதல் செய்தரூ.60.76 லட்சம் திரும்ப ஒப்படைப்பு
/
வாகன சோதனையில் பறிமுதல் செய்தரூ.60.76 லட்சம் திரும்ப ஒப்படைப்பு
வாகன சோதனையில் பறிமுதல் செய்தரூ.60.76 லட்சம் திரும்ப ஒப்படைப்பு
வாகன சோதனையில் பறிமுதல் செய்தரூ.60.76 லட்சம் திரும்ப ஒப்படைப்பு
ADDED : மார் 29, 2024 05:12 AM
நாமக்கல்: நாமக்கல் லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது முதல், 50,000 ரூபாய் ரொக்கத்திற்கு மேல், 10,000 ரூபாய்க்கு மேல் பரிசு பொருட்களை, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மாவட்டம் முழுதும் குழுக்கள் அமைக்கப்பட்டு, பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் வரை, ஒரு கோடியே, 56 லட்சத்து, 53,395 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கத்தை, திரும்ப ஒப்படைக்க மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் மேல்முறையீட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையிலான குழுவினர், உரிய ஆவணங்களை ஒப்படைக்கும் நபர்களுக்கு, பணத்தை திரும்ப வழங்கி வருகின்றனர். நேற்று முன்தினம் வரை, 60 லட்சத்து, 76,735 ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.