/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
86 மையங்களில் பிளஸ் 2 தேர்வு17,983 பேர் பங்கேற்பு; 178 பேர் 'ஆப்சென்
/
86 மையங்களில் பிளஸ் 2 தேர்வு17,983 பேர் பங்கேற்பு; 178 பேர் 'ஆப்சென்
86 மையங்களில் பிளஸ் 2 தேர்வு17,983 பேர் பங்கேற்பு; 178 பேர் 'ஆப்சென்
86 மையங்களில் பிளஸ் 2 தேர்வு17,983 பேர் பங்கேற்பு; 178 பேர் 'ஆப்சென்
ADDED : மார் 04, 2025 01:28 AM
86 மையங்களில் பிளஸ் 2 தேர்வு17,983 பேர் பங்கேற்பு; 178 பேர் 'ஆப்சென்ட்'
நாமக்கல்:பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாவட்டத்தில், 198 பள்ளிகளை சேர்ந்த, 17,983 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 178 தேர்வர்கள், 'ஆப்சென்ட்' ஆகினர்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, நேற்று தொடங்கி, வரும், 25 வரை நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில், ஏழு அரசு உதவிபெறும் பள்ளி, 95 அரசுப்பள்ளி, நான்கு அரசு உதவிபெறும் (பகுதி அளவு) பள்ளி, 92 தனியார் பள்ளி என, மொத்தம், 198 பள்ளிகளை சேர்ந்த, மொத்தம், 18,104 மாணவ, மாணவியர், டுடோரியல் மாணவர்கள், 59 பேர் என மொத்தம், 18,163 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
இதற்காக, 86 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில், முதன்மை கண்காணிப்பாளர்கள், 86 பேர், துறை அலுவலர்கள், 86 பேர், கூடுதல் துறை அலுவலர்கள், நான்கு பேர், பறக்கும்படை உறுப்பினர்கள், 200 பேர், வழித்தட அலுவலர்கள், 24 பேர், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 3 பேர், அறை கண்காணிப்பாளர்கள், 1,260 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் கலெக்டர் உமா, நாமக்கல் அடுத்த செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் கிரீன்பார்க் மெட்ரிக் பள்ளிகளில் அமைந்துள்ள தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், தேர்வு மையங்களில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சொல்வதை எழுதுபவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தார்.
நேற்று துவங்கிய தேர்வில், 17,983 பேர் பங்கேற்றனர். 178 தேர்வர்கள் கலந்துகொள்ளவில்லை. அதில் பிரெஞ்ச், 41 பேர், சமஸ்கிருதம், 4 பேர் என, 100 சதவீதம் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி, துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.