/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆனி முதல் ஞாயிறு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
/
ஆனி முதல் ஞாயிறு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED : ஜூன் 17, 2024 01:30 AM
நாமக்கல்: ஆனி முதல் ஞாயிற்றுக்
கிழமையையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் நகரில் வரலாற்று சிறப்புமிக்க ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒரே கல்லால், 18 அடி உயரத்தில் உருவான சுவாமி, நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் வருட பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி மற்றும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறும்.
அதன்படி, நேற்று ஆனி முதல் ஞாயிறையொட்டி, காலை, 10:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்பட்டது. தொடர்ந்து, 11:00 மணிக்கு நல்லெண்ணெய், சீயக்காய்த்துாள், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும்
பிரசாதம் வழங்கப்பட்டது.

