/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலையில் கருங்காலி, மூலிகைகள் விற்றால் நடவடிக்கை
/
கொல்லிமலையில் கருங்காலி, மூலிகைகள் விற்றால் நடவடிக்கை
கொல்லிமலையில் கருங்காலி, மூலிகைகள் விற்றால் நடவடிக்கை
கொல்லிமலையில் கருங்காலி, மூலிகைகள் விற்றால் நடவடிக்கை
ADDED : மே 04, 2024 07:04 AM
சேந்தமங்கலம் : கொல்லிமலையில், கருங்காலி கட்டைகள், காப்பு காட்டில் மூலிகைகள் பறித்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, வன அலுவலர் எச்சரித்துள்ளார்.
கொல்லிமலையில் கருங்காலி கட்டைகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கொல்லிமலையில் கருங்காலி மரத்துண்டுகள் வைத்து கடைகளில் விற்பனை செய்வதோ அல்லது கருங்காலி கட்டைகள் வாங்குவது சட்டப்படி குற்றமாகும்.
இதை மீறுவோர் மீது வனப்பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், கொல்லிமலை பகுதியில் தடைசெய்யப்பட்ட மூலிகை இனங்களை காப்புகாட்டில் நுழைந்து சேதம் செய்வதே அல்லது அதை பறித்து விற்பனை செய்வது வனச்சட்டப்படி குற்றமாகும். விதிமுறைகளை மீறுவோர் மீது வனப்பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட வன அலுவலர் கலாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.