/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நீதிமன்ற அவமதிப்பு யுவராஜ் வழக்கு ஒத்திவைப்பு
/
நீதிமன்ற அவமதிப்பு யுவராஜ் வழக்கு ஒத்திவைப்பு
ADDED : ஏப் 26, 2024 03:57 AM
நாமக்கல்: நீதிமன்றத்தை, அவமதிப்பு செய்ததாக தொடரப்பட்ட யுவராஜ் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் ஓமலுாரை சேர்ந்தவர் இன்ஜினீயர் கோகுல்ராஜ், 23. இவர் கடந்த, 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட, 17 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்காக யுவராஜை, போலீசார் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகனுக்கு எதிராக, ஆவேசமாக பேசியதாக யுவராஜ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜை, போலீசார் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது மாஜிஸ்திரேட்டு நந்தினி, வழக்கு விசாரணையை ஜூலை, 4ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

