/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மரக்கன்றுகளை பராமரிக்க பணியாளர்களுக்கு அறிவுரை
/
மரக்கன்றுகளை பராமரிக்க பணியாளர்களுக்கு அறிவுரை
ADDED : ஆக 22, 2024 01:50 AM
சேந்தமங்கலம், ஆக. 22-
முன்னாள் முதல்வர் கருணாநிதியின், நுாற்றாண்டு விழாவையொட்டி, கடந்தாண்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஐந்து லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இதேபோல், சேந்தமங்கலம் உட்கோட்டத்தில், புதன்சந்தை முதல் சேந்தமங்கலம் சாலை வரை, 500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. அந்த மரக்கன்றுகளுக்கு மூங்கில் கூண்டு அமைக்கப்பட்டு, வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சாலையோரம் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என, நேற்று சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பாளர் சசிக்குமார் ஆய்வு செய்தார். அப்போது, மரக்கன்றுகளை நன்றாக பராமரிக்க வேண்டும் என, பொறியாளர்களுக்கும், சாலைப்பணியாளர்களுக்கும் அறிவுரை வழங்கினார். கோட்ட பொறியாளர் திருகுணா, உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ்குமார், இளநிலை பொறியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.