/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆக., 1ம் தேதி அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம்
/
ஆக., 1ம் தேதி அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம்
ADDED : ஜூலை 26, 2024 03:01 AM
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி-யிருப்பதாவது: இந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர், ஸ்டோர் கீப்பர் டெக்னிகல், டிரேட்ஸ்மேன் ஆகிய பிரிவுகளுக்கு ஆட்சேர்ப்பு முகாம் நடக்கவுள்ளது. கோயம்புத்துார் நேரு ஸ்டேடியம், ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தில் ஆக., 1ம் தேதி முதல், 5ம் தேதி வரை நடக்கிறது.
நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்-டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய, 11 மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள், கலந்து கொள்வ-தற்காக அட்மிட் கார்டு பெற்றவர்கள் கட்டாயம் கொண்டு வர வேண்டும். அக்னி வீரர்கள் தேர்வானது, ஆன்லைனில் கணினி வழியிலாக மட்டுமே நடைபெறும். இந்திய ராணுவத்தின் தேர்வு மற்றும் ஆட்தேர்வுக்கு எந்த நிலையிலும், யாருக்கும் லஞ்சம் கொடுக்கப்பட மாட்டாது.
ஆட்சேர்ப்பு முகவர்களை நம்ப வேண்டாம். ஆள்சேர்ப்பு செயல்-முறை முற்றிலும் ஆன்லைன் மூலமாக நியாயமான மற்றும் வெளிப்படையான தன்மையுடன் நடைபெறும். விளம்பரதா-ரர்கள் மற்றும் முகவர்களுக்கு எந்த பங்கும் இல்லை, மேலும் அத்தகைய முகவர்கள் அல்லது ஏஜென்சிகளையும் நம்ப வேண்டாம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.