/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அண்ணாதுரை பிறந்தநாள் விழா தி.மு.க., - அ.தி.மு.க., மரியாதை
/
அண்ணாதுரை பிறந்தநாள் விழா தி.மு.க., - அ.தி.மு.க., மரியாதை
அண்ணாதுரை பிறந்தநாள் விழா தி.மு.க., - அ.தி.மு.க., மரியாதை
அண்ணாதுரை பிறந்தநாள் விழா தி.மு.க., - அ.தி.மு.க., மரியாதை
ADDED : செப் 16, 2024 02:43 AM
ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை பேரூர் தி.மு.க., சார்பில், நேற்று முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பேரூர் கழக செயலாளரும், டவுன் பஞ்., துணை தலைவருமான அன்பழகன் தலைமை வகித்தார். தலைவர் சேரண் முன்னிலை வகித்தார்.பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், உள்ளாட்சி, பிரதிநிதிகள், சார்பு அணியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல், சீராப்பள்ளியில் பேரூர் செயலாளர் செல்வாஜ், ஆர்.புதுப்பட்டி ஜெயக்குமார், பட்டணம் நல்லதம்பி தலைமையில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அண்ணா உருவ படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். ராசிபுரத்தில் நகர செயலாளர் சங்கர் தலைமையில் விழா கொண்டாடப்பட்டது. சேர்மன் கவிதா உள்ளிட்ட கவுன்சிலர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
* திருச்செங்கோட்டில், நகர ஒன்றிய தி.மு.க., சார்பில், பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நகர தி.மு.க., செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார். நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மதுராசெந்தில், தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர் நடேசன், நகர்மன்ற தலைவர் நளினிசுரேஷ்பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
* குமாரபாளையம் - சேலம் சாலையில் உள்ள, அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில், முன்னாள் செயலர் குமணன் தலைமையில், அண்ணாதுரை உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.