ADDED : அக் 08, 2026 03:28 AM
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம்
டவுன் பஞ்., வெங்கடேசபுரி பகுதியில், கடந்த பல ஆண்டுகளாக ஊராட்சி
ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், கடந்த, நான்கு
மாதத்தில், மூன்றாம் வகுப்பிற்கு மட்டும், ஐந்து ஆசிரியர்கள் மாற்றம்
செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் அடிக்கடி மாறி வருவதால்,
இங்குள்ள, மூன்றாம் வகுப்பு மாணவர்களை, ஒன்று, இரண்டாம் வகுப்புகளில்
அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர்.இதனால்
மாணவர்கள் குழப்பமடைந்து, கற்றல் திறன் மற்றும் புரிதல் திறன் குறைந்து
மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இப்பள்ளியில் நிரந்தரமாக,
மூன்றாம் வகுப்பிற்கு ஆசிரியரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி,
அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர், மல்லசமுத்திரம் வட்டார
கல்வி அலுவலர் சக்திவேலிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
