ADDED : அக் 08, 2026 03:29 AM
அ நிறம் | அளவு
ப.வேலுார்:ப.வேலுார்
அரிமா சங்கம் சார்பில், டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு
வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, பள்ளி சாலையில் உள்ள
அரிமா சங்க வளாகத்தில், நடந்தது. ப.வேலுார் அரிமா சங்க தலைவர்
சசிகுமார் தலைமை வகித்தார்.
அரிமா சங்க மாவட்ட ஆலோசனை குழு தலைவர்
நெடுஞ்செழியன் பேசுகையில், ''திடீர் காய்ச்சல், கடும் தலைவலி, எலும்பு,
தசைகளில் தாங்க முடியாத வலி, தீவிர சோர்வு, வாந்தி உணர்வு மற்றும்
உடலில் சிவப்பு நிற புள்ளிகள் தோன்றுவது ஆகியவை டெங்கு காய்ச்சலின்
முதன்மை அறிகுறிகளாகும். இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால், உரிய
சிகிச்சை பெற வேண்டும்,'' என்றார்.
