/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓட்டுப்பதிவு குறைந்த பகுதிகளில் விழிப்புணர்வு
/
ஓட்டுப்பதிவு குறைந்த பகுதிகளில் விழிப்புணர்வு
ADDED : ஏப் 07, 2024 03:39 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சியில், கடந்த தேர்தல்களில் ஓட்டுப்பதிவு குறைந்த பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் முருகன், ரெட் கிராஸ் செயலர் ராஜேஷ்கண்ணன், தாசில்தார் சண்முகவேல் உள்பட பலர் பங்கேற்று, வீடு வீடாக சென்று, 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டி துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் செய்தனர். தொடர்ந்து, விழிப்புணர்வு பேரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கி, மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. வழி நெடுக, 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தவாறு சென்றனர். வருவாய்த்துறையினர், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

