/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பயிர் சுழற்சியால் நன்மை: விவசாயிகளுக்கு ஆலோசனை
/
பயிர் சுழற்சியால் நன்மை: விவசாயிகளுக்கு ஆலோசனை
ADDED : செப் 16, 2024 02:49 AM
நாமகிரிப்பேட்டை: பல்வேறு நன்மைகள் கிடைப்பதால், பயிர் சுழற்சி முறையை பின்பற்ற விவசாயிகளுக்கு நாமகிரிப்பேட்டை வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு: பயிறு வகைகள் பயிரிட்ட பின், பயறு அல்லாத வேறு ஏதேனும் பயிர்களைப் பயிர் செய்ய வேண்டும். பச்சை பயிறுக்கு பின் கோதுமையும், அதற்கு பின் மக்காச்சோளம் பயிரிடலாம். முதலில் செய்த பயிர் வகை அல்லது தானியங்கள் போன்ற வேறு ஒன்றுடன் ஊடு பயிராக பயிர் செய்திருந்தால் மீண்டும் வேறு வகை பயிருடன் சேர்த்து பயறு வகைகளை பயிர் செய்யலாம்.எள், கடலை உள்ளிட்ட பயிர்கள் மண்ணிலுள்ள சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சி விடுகின்றன. எனவே, இப்பயிர்களை பயிரிட்டபின் பயறு வகைகளை பயிரிட்டால் அவை சத்துக்களை மண்ணில் நிலைநிறுத்துகின்றன. அவ்வப்போது இலைகள் மண்ணில் உதிரும் பருத்தி, கோதுமை, நெல் வகை செடிகளை பயிரிடலாம்.
தானிய பயிர்களுக்கு பிறகு பசுந்தாள் உரத்தாவரங்களை பயிரிடலாம். சனப்பை பயிருக்கு பின், நெல், துவரம் பருப்பு, பச்சை பயிறுக்கு பின் கோதுமை, மக்காச்சோளம் பயிரிடலாம். நல்ல அதிக ஊட்டச்சத்து தேவை மிக்க பயிறுக்குப்பின், குறைந்த ஊட்டச்சத்து தேவைமிக்க பயிர்களை பயிரிட வேண்டும். பருவம் சார்ந்த பயிர்கள் பயிரிட்ட பின் ஓராண்டு தாவரங்களை பயிர் செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.