/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பாலியல் வன்முறையை கண்டித்து நாளை பா.ஜ., மவுன ஊர்வலம்'
/
பாலியல் வன்முறையை கண்டித்து நாளை பா.ஜ., மவுன ஊர்வலம்'
பாலியல் வன்முறையை கண்டித்து நாளை பா.ஜ., மவுன ஊர்வலம்'
பாலியல் வன்முறையை கண்டித்து நாளை பா.ஜ., மவுன ஊர்வலம்'
ADDED : ஆக 15, 2024 01:53 AM
சென்னை,''மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில், மத்திய அமைச்சர் முருகனும், நானும் பங்கேற்போம்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை
கூறினார்.
தமிழக பா.ஜ., சுற்றுச்சூழல் அணி பிரிவு சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பயிலரங்கம், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு விருது வழங்குதல், நிர்வாகிகள் கருத்தரங்கம் என, முப்பெரும் நிகழ்ச்சி, சென்னை தி.நகரில் நேற்று நடந்தது. நிகழ்ச்சி முடிவில், அண்ணாமலை அளித்த பேட்டி:
சுதந்திர தினத்தை ஒட்டி, மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தவும், தேசிய கொடியை மரியாதையுடன் பொதுமக்கள் எடுத்து செல்லவும், அரசு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என, உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழகம் முழுதும் இன்று, பொதுமக்களுடன் இணைந்து, பா.ஜ.,வினர் தேசியக் கொடியை எல்லா இடத்திற்கும் எடுத்து செல்ல உள்ளனர். சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் சிலைகள் முன் மரியாதை செலுத்துவர். பொதுமக்களுடன் இணைந்து பேரணியை பா.ஜ.,வினர் நடத்துவர்.
தமிழகத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது. இதில், தி.மு.க., நிர்வாகி சம்பந்தப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் நடந்த மருத்துவ மாணவி கொலை, தமிழகத்தில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறையை கண்டித்து, நாளை தமிழகம் முழுதும், பா.ஜ., சார்பில் மகளிர் அணியை முன்னிறுத்தி, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில், மவுன ஊர்வலம் நடத்தப்படும்.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைக்க, தே.ஜ., கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் ஒரே குரல் எழுப்புகின்றனர். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க மாட்டோம் எனக் கூறி வருகின்றனர். இதை பார்த்தால், எங்களை கூட்டணிக்கு அழைக்கிறார்களா என்ற சந்தேகம் வருகிறது.
கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார். மத்திய அமைச்சர் முருகனும், நானும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.