/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி கட்டி போராட்டம்
/
கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி கட்டி போராட்டம்
கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி கட்டி போராட்டம்
கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி கட்டி போராட்டம்
ADDED : ஜூலை 08, 2024 07:25 AM
எலச்சிபாளையம்: எளையாம்பாளையத்தில், 10 ஆண்டுகளுக்கு கல்குவாரி நடத்த தனியார் ஒருவர், கடந்த ஜன., மாதம் அனுமதி பெற்றார். ஆனால், இந்த கல்குவாரி, அரசு விதிகளை மீறி அமைக்கப்பட்டதாக கூறி, அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும், அதிகாரிகளிடத்தில் கோரிக்கை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
இந்நிலையில், போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்ற அறிவிப்பின் படி, சொந்த நிலத்தில் போராட்டம் நடத்த அரசு தடை செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், அரசு விதிகளை மீறி இயங்கும் கல்குவாரியை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், நேற்று கோக்கலை, நெய்க்காரம்பாளையம், எளையாம்பாளையம், குஞ்சாம்பாளையம், பெரியமணலி, குறுக்கபுரம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள், தங்களது வீடுகளில் கறுப்புக்கொடி கட்டியும், கையில் கொடியை ஏந்தியும் எதிர்ப்பை தெரிவித்தனர்.