/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மொபைல் ஷோரூமில் மோசடி சேலம் ஊழியர் மீது வழக்கு
/
மொபைல் ஷோரூமில் மோசடி சேலம் ஊழியர் மீது வழக்கு
ADDED : ஆக 04, 2024 03:41 AM
ஓசூர்: ஓசூரில் பிரபல ஷோரூமில், 8.48 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொபைல்போன் மாயமானது தொடர்பாக, சேலத்தை சேர்ந்த ஊழியர் மீது, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலையிலுள்ள கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ரமேஷ், 48; பிரபல மொபைல் கடைகளின், மனிதவள பிரிவு மேலாளர்; கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், பாகலுார் சாலையிலுள்ள மொபைல் கடை கிளை மேலாளராக, சேலம், அஸ்தம்பட்டியை சேர்ந்த பெருமாள், 30, இருந்தார். கடந்த மே, 15ல் ரமேஷ் ஆய்வு செய்த போது, 8.48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மொபைல்போன் மற்றும் உதிரி பாகங்களை காணவில்லை.
இதுகுறித்து கேட்டபோது, நிறுவனத்துக்கு தெரியாமல் விற்-பனை செய்ததை, பெருமாள் ஒப்புக் கொண்டார். அதற்காக, 90,000 ரூபாயை வழங்கினார்.
மீதி, 7.58 லட்சம் ரூபாயை கொடுக்காமல் ஏமாற்றினார். ரமேஷ் புகார் படி, பெருமாள் மீது, ஓசூர் டவுன் போலீசார் வழக்-குப்பதிந்து விசாரிக்கின்றனர்.