/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்
/
தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்
ADDED : செப் 18, 2024 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தையல் பயிற்சி முடித்த
பெண்களுக்கு சான்றிதழ்
சேந்தமங்கலம், செப். 18-
கொல்லிமலை, திருப்புளிநாடு பஞ்., ரத்தினசபாபதி சுற்றுச்சூழல் கிராமிய வளர்ச்சி நிறுவனம் சார்பில், நேற்று இலவச தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. பஞ்., தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். ஆரியூர் நாடு பஞ்., தலைவர் நாகலிங்கம், துணைத்தலைவர் மேனகா, தையற் பயிற்சியாளர் எப்சிகா குளோரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில், ரத்தினசபாபதி கிராமிய நிறுவனத்தின் இயக்குனர் தில்லைசிவக்குமார், 3 மாத தையல் பயிற்சி பெற்ற மகளிரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.