/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: செப்., 2க்குள் முன்பதிவு செய்ய அழைப்பு
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: செப்., 2க்குள் முன்பதிவு செய்ய அழைப்பு
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: செப்., 2க்குள் முன்பதிவு செய்ய அழைப்பு
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: செப்., 2க்குள் முன்பதிவு செய்ய அழைப்பு
ADDED : ஆக 27, 2024 03:21 AM
நாமக்கல்: 'முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு, வரும் செப்., 2க்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழக முதல்வர் அறிவிப்பின்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, 2023 முதல், 'தமிழக முதல்வர் கோப்பை' விளையாட்டு போட்டிகள், தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக நடத்தப்பட்டு வருகிறது.
இப்போட்டிகளுக்காக மொத்த பரிசுத்தொகை, 25 கோடி ரூபாய் உட்பட, 50.89 கோடி ரூபாய் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. இந்தாண்டில் நடக்கும் போட்டிகளில், வெவ்வேறு புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என, 5 பிரிவுகளில், 27 விளையாட்டுகள், 53 வகைகளில் மாவட்ட, மண்டல, மாநில அளவிலான போட்டிகள், வரும், செப்., அக்.,ல் நடக்கிறது.
இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விபரத்தை https://sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் செய்திட வேண்டும். மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் பரிசு, ஒரு லட்சம் ரூபாய், 2ம் பரிசு, 75,000 ரூபாய், மூன்றாம் பரிசு, 50,000 ரூபாய் வழங்கப்படும்.
குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் பரிசு, 75,000 ரூபாய், இரண்டாம் பரிசு, 50,000 ரூபாய், மூன்றாம் பரிசு, 25,000 ரூபாய் வழங்கப்படும். இந்தாண்டு தனி நபர் மற்றும் குழு போட்டிகளுக்கான மொத்த பரிசுத்தொகை, 37 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும், 12 முதல், 19 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கும், 17 முதல், 25 வயது வரை கல்லுாரி மாணவ மாணவியருக்கும், 15 முதல், 35 வயது வரை பொதுப்பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்ய கடைசி நாள், செப்., 2 ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.