ADDED : செப் 10, 2024 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம், தெற்கு காலனியை சேர்ந்தவர் கார்த்திகா, 23; கூலித்தொழிலாளி. இவருக்கு, மூன்று, ஒரு வயதில் இரண்டு பெண் குழந்தைகள். இந்நிலை யில், நேற்று காலை, 7:30 மணிக்கு வீட்டில் இரண்டு பெண் குழந்தைகளும் விளையாடிக்கொண்டி-ருந்தனர்.
கார்த்திகா, சமையலறையில் பால் காய்ச்சிக்கொண்டி-ருந்தார். சிறிது நேரம் கழித்து கார்த்திகா சென்று பார்த்தபோது, படுக்கையில் இருந்த பெட்சீட், ஒரு வயது குழந்தையான பிரதிக்ஷா மீது மூடப்பட்டிருந்தது. பெட்சீட்டை எடுத்து பார்த்தபோது, குழந்தை பிரதிக்ஷா மயங்கி கிடந்தார். பதறிய கார்த்திகா, குழந்தையை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை பிரதிக்ஷா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.