/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிறுமிகளிடம் சில்மிஷம் முதியவருக்கு போக்சோ
/
சிறுமிகளிடம் சில்மிஷம் முதியவருக்கு போக்சோ
ADDED : ஜூன் 30, 2024 01:43 AM
ராசிபுரம், சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரை, போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
நாமகிரிப்பேட்டை யூனியன், உடையார்பாளையத்தை சேர்ந்தவர் காசி, 69; கூலித்தொழிலாளி. இவர், அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுப்பது வழக்கம். சில நாட்களுக்கு முன், இப்பகுதியில் உள்ள, 11, 12 வயதுள்ள, இரண்டு பெண் குழந்தைகள், அவர்களது தாயாரிடம், 'காசி, தங்களிடம் தின்பண்டத்தை கொடுத்துவிட்டு தவறாக நடப்பதாக' தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெற்றோர் விசாரித்தபோது, காசி, பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. இதுகுறித்து, ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசில், குழந்தைகளின் பெற்றோர் புகாரளித்தனர். புகார்படி, இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி, காசியை கைது செய்தார்.